ஜனவரி 29, புதுடெல்லி (New Delhi): இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை தடுக்கவும், அதனை கண்டறிந்து பறிமுதல் செய்யவும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சுங்கத்துறையினர் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லிக்கு ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த (Delhi Customs) பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, மின்சார மீட்டர்கள் என்று கூறப்பட்ட மீட்டர் வழக்கத்திற்கு மாறான எடையுடன் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் அதனை பிரித்து சோதனை செய்தபோது, தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய பொருட்களால் மின்சார மீட்டர் தயாரிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. நூதன முறையில் புதிய முயற்சியாக மீட்டர்களை வெள்ளியில் உருக்கி தயாரித்து, அதற்கு வர்ணம் பூசி திட்டத்துடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த முயற்சி அதிகாரிகளின் திறன்வாய்ந்த செயலால் பறிபோனது. 56 மீட்டர்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூபாய் 10 கோடி மதிப்பிலான தங்கம் & வெள்ளிகளை பறிமுதல் செய்துள்ளனர். 16.6 கிலோ அளவிலான வெள்ளி, 39.7 கிலோ தங்கம் உருக்கி மின் மீட்டராக மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. Farmer Suicide: கடன் தொல்லையால் விவசாயி விபரீதம்; தோட்டத்திலேயே தூக்கிட்டு தற்கொலை.!
10 करोड़ रुपए के सोने-चांदी के बिजली मीटर देखिए -
स्मगलर हांगकांग से बिजली मीटरों पर सोने चांदी-चांदी का कवर चढ़वा लाए। एयरपोर्ट पर DRI ने पकड़ लिए। pic.twitter.com/L0VHGDhW4r
— Sachin Gupta (@SachinGuptaUP) January 28, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)