மார்ச் 27, போஜ்புர் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்புரில், நேற்று இரவு ஆராஹ் சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து மும்பை எல்எல்டி நோக்கி இயக்கப்பட்ட சிறப்பு இரயில் திடீரென தீ விபத்தை சந்தித்தது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் வந்தவர்கள் (Bhojpur Train Fire Accident), மீண்டும் பணியிடத்திற்கு திரும்ப ஏதுவாக இயக்கப்பட்ட இரயில், ஆராஹ் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிலமணித்துளிகளில், கரிசத் இரயில் நிலையம் அருகே இவ்விபத்தில் சிக்கியது. இதனையடுத்து, இரயில் பயணிகள் அனைவரும் அபாயசங்கிலியை பிடித்து இழுத்து அவசர கதியில் ரயிலில் இருந்து இறங்கி உயிர்தப்பினார். நல்வாய்ப்பாக எவ்வித காயமும் யாருக்கும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் மாற்று இரயிலில் மீண்டும் தங்களின் பயணத்தை தொடங்கினர். இதனால் அவ்வழித்தடத்தில் நேற்று இரவு 5 இரயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த இரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. Money Recovered from Washing Machine: ரெய்டில் அதிரடி காட்டிய அமலாக்கத்துறை; வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக பணம்.. ரூ.2.54 கோடி பறிமுதல்.!
#WATCH | Bhojpur, Bihar: A fire broke out in one coach of the Mumbai LTT Special Fare SF Holi Special near Karisath station, at a short distance from Arrah Junction, on March 26. No casualties or injuries have been reported: CPRO, East Central Railways pic.twitter.com/X95N3XkOql
— ANI (@ANI) March 27, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)