ஜூலை 19, உத்திர பிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா பகுதியில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது அவரின் வீட்டருகே பாம்பு ஒன்று சுற்றித்திரிந்த நிலையில், அந்த பாம்பை பிடித்தவர் தனது வாயால் கடித்து தின்று இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அசோக் என்ற அந்த நபரை மீட்டு அங்குள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதை என்பது உயிருக்கு எப்படியெல்லாம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. உடலில் தற்கொலை குறிப்பு எழுதி பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

பாம்பை தின்றபின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)