ஆகஸ்ட் 08, பீஜினோர் (Uttar Pradesh News): தென்மேற்குப்பருவமழை காரணமாக பெரும்பாலான வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஒருசில இடங்களில் முதலைகள் கிராமங்கள் மற்றும் குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்துவிடுகின்றன. இதனை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பீஜினோர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. கிராமத்தின் சாலை வழியே மக்களை கண்டு அஞ்சாது முதலை சென்றது, வடிவேல் காமெடி பாணியில் "என்ன பங்காளி சௌக்கியமா?" என்ற கேள்வியை எழுப்பி சென்றதுபோல அமைந்துள்ளது. Lithium-Ion Battery Explosion: செல்போனை கடித்து விளையாடிய நாய்; திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பு..! பகீர் வீடியோ உள்ளே..!
A crocodile strolling through the village streets in Bijnor, UP
— Ghar Ke Kalesh () August 8, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)