மே 30, புலந்த்சாகர் (Uttar Pradesh News): கங்கை நதிக்கரையோரம் அமைந்துள்ள உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில், முதலைகள் நடமாட்டம் என்பது அதிகம். அவ்வப்போது இவை கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்துகொள்வதும் வாடிக்கையான ஒன்றாகும். இதுகுறித்த தகவல் கிடைக்கப்பெற்றால், வனத்துறை அதிகாரிகள் முதலைகளை பிடித்துச்சென்று மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு சென்று ஆற்றுக்குள் விடுவார்கள். இந்நிலையில், புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள நரோரா கங்கா காடுகளை ஒட்டியுள்ள கால்வாயில் 10 அடிநீளமுள்ள முதலை ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், முதலையை அலேக்காக தூக்கி ஆற்றுக்குள் சென்று விட்டனர். Gold Smuggling Case: காங்கிரஸ் தலைவர் சசி தரூருக்கு புதிய சிக்கல்? தங்கக்கடத்தில் வழக்கில் பிஏ கைது., அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)