ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): மக்களவை மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22 தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை.23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் . மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பின் முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) தாக்கல் செய்து வருகிறார். அதன்படி வேளாண்துறையில் வரும் 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட 1 கோடி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெரும் வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்படும். காலநிலை மாற்றத்தினால் பயிற்சிகள் பாதிக்கப்படாத வகையில் திட்டம் அறிமுகம் செய்யப்படும். நிலக்கடலை, எள், சூரியகாந்தி உற்பத்தி அதிகரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும். விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அமல்படுத்த மாநில அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்துறைக்காக ரூ.1.5 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடக்கவிலையை காட்டிலும் 20 % இலாபத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வழிவகை செய்யப்படும். பருவநிலையை தாக்குப்பிடித்து வளர்ச்சியடையும் தன்மை கொண்ட 102 வகையிலான பயிர்கள் அறிமுகம் செய்யப்படும். Elon Musk Shares AI Video: உலகத் தலைவர்களின் பேஷன் ஷோ.. எலான் மஸ்க் வெளியிட்ட ஏஐ வீடியோ..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)