Bull Attacks Child: வீட்டு வாசலில் அமைதியாக நின்ற சிறுவனை தாக்கிய காளைமாடு.. வெளியான பதைபதைப்பு வீடியோ.. பெற்றோர்களே கவனம்.!

அங்கு யார்? அல்லது எந்த விலங்கு வந்து அவர்களை தீண்டப்போகிறது? என எண்ணி அலட்சியமாக இருக்கும் பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டியதன் பின்னணியை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Bull Attacks Child (Photo Credit: Twitter)

மார்ச் 09 (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் (Aligarh, UttarPradesh) நகரை சேர்ந்த சிறுவன் தனது வீட்டில் வாசலில் நின்று கொண்டு இருந்தான். அப்போது, அவ்வழியே சென்ற காளை ஒன்று சிறுவனை நோக்கி ஒருகணம் நின்றது. பின்னர், சற்றும் எதிர்பாராத நிலைமையில் சிறுவனை (Bull Attacks Child) முட்டி தூக்கி, அவனின் மீது படுத்துக்கொண்டது. சிறுவனின் அழுகுரல் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அவ்வழியே சென்ற இளைஞரின் உதவியால் குழந்தை மீட்கப்பட்டது. அந்த சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அந்த காளைமாடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக நீண்ட காலமாக இருப்பதாக குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது. Helmet on Train: இரயில் பயணத்தில் தலைக்கவசம் அணிந்த இளைஞர்.. அதற்கான காரணமாக அவரே தெரிவித்த சுவாரஸ்ய தகவல்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)