ஜூன் 10, சென்னை (Chennai): தொழில்நுட்பமயம், இணையமோகம் என வேறொரு உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கும் இன்றைய இளைஞர்கள், சாகசத்தை யோசிக்காமல் நொடியில் நிகழ்த்துகிறார்கள் எனினும், முறையான பயிற்சி இன்மை மற்றும் ஒருநொடி அலட்சியம் போன்றவை அவர்களின் உயிருக்கும் எமனாக அமைகிறது. அவர்களின் எண்ணத்தில் உள்ள வேகம் சரியானது எனினும், அதற்கான தகுதி மற்றும் திறமை கொண்டு அவ்வாறான சாகசங்களை செய்யாமல் முன்கூட்டியே முயற்சியை எடுத்து, அந்த வேகத்தில் உச்சத்தையும் தொட்டு இறுதி பயணம் மேற்கொள்கின்றனர். ஒருசிலர் சாலையில் ஓரமாக செல்லும் அப்பாவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் வெளியிட்டுள்ள வீடியோவில், சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து விபத்தில் சிக்குகிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கண்டித்துள்ள அவர், இவ்வாறான செயலை செய்யும் சிறுவர்களின் பெற்றோரின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். Kallakkadal Warning: தென்மாவட்டங்களில் கடலோரம் மீண்டும் கள்ளக்கடல் எச்சரிக்கை; மறந்தும் கடற்கரைக்கு போயிடாதீங்க.!
సోషల్ మీడియాలో రాత్రికి రాత్రే ఫేమస్ కావడం కోసం ఇలాంటి ప్రమాదకర స్టంట్స్ చేస్తూ.. యువత బంగారు భవిష్యత్తును నాశనం చేసుకుంటోంది. లైక్లు, కామెంట్ల కోసం ప్రాణాలను సైతం లెక్కచేయడం లేదు. ఇలాంటి పిచ్చి పనులు చేసేటప్పుడు మీ కుటుంబ సభ్యుల గురించి ఒకసారి ఆలోచించండి. pic.twitter.com/JnvEoEkRma
— V.C. Sajjanar, IPS () June 9, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)