Woman was Attacked With an Axe: நிலத்தகராறில் மூத்த சகோதரி மீது கோடாரியால் கொடூரமாக தாக்குதல்; வாலிபர் கைது.. வீடியோ வைரல்..!

ஆந்திர பிரதேசத்தில் வீட்டு நிலம் தொடர்பான ஏற்பட்ட சொத்து தகராறில் வாலிபர் ஒருவர் தனது மூத்த சகோதரியை கோடாரியால் கொடூரமாக தாக்கியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Woman was Attacked With an Axe: நிலத்தகராறில் மூத்த சகோதரி மீது கோடாரியால் கொடூரமாக தாக்குதல்; வாலிபர் கைது.. வீடியோ வைரல்..!
Woman was Attack with an Axe (Photo Credit: @TeluguScribe X)

ஜூலை 10, அனந்தபூர் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம், கர்லாடின்னே மண்டலம் பெனகச்சர்லா கிராமத்தில், வீட்டு நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தம்பி ஜிலான், மூத்த சகோதரி மஹ்பூபி ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை இதுதொடர்பாக தனது மூத்த சகோதரியிடம் தகராறில் ஈடுபட்ட ஜிலான், தனது சகோதரியை கோடரியால் பலமாக தாக்கினார். அப்போது உடன் இருந்த மஹ்பூபியின் மகள் ஷகுன்பி தடுக்க செல்லும்போது அவரையும் கோடரியால் (Axe) தாக்கியுள்ளார். Young Woman Pregnancy: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் திருமணத்திற்கு மறுப்பு; காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!

பின்னர், அருகில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி காயம் அடைந்தவர்களை மீட்டு அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ஜிலானை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).