Women Fired Car: சிகிரெட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்; காரை கொளுத்திவிட்ட இளம்பெண்.. பகீர் காட்சிகள் வைரல்.!

எரிபொருள் நிரப்ப வந்த நபரிடம் சிகிரெட் கேட்ட பெண்மணி, சிகிரெட் கிடைக்காத ஆத்திரத்தில் அவரின் வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது.

Visual taken From Video (Photo Credit: @PicturesFoIder X)

பிப்ரவரி 19, ஜெருசலேம் (World News): இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேம் பகுதியில் செயல்பட்டு வரும் எரிபொருள் நிலையத்தில், காரில் வந்த நபர் தனது காருக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு வந்த பெண்மணி ஒருவர் சிகிரெட் கேட்டார். பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்தவர் சிகிரெட் கொடுக்க மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த பெண்மணி எரிபொருள் நிரப்பும்போது தீ வைத்தார். இதனால் மளமளவென தீ பரவியது. அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக மனித உயிர்களும் காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Paytm Fastag: பேடிஎம் பாஸ்ட்டேக் பரிவர்த்தனைகளுக்கு ஆப்பு; பட்டியலில் இருந்து தூக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்..!