ஜனவரி 17, கோவா (Goa News): கோவாவில் தன்னுடைய காதலி கழிவறையை பயன்படுத்தும் பொழுது ஹோட்டல் உரிமையாளர் எட்டிப் பார்த்ததாக நபர் ஒருவர் ரெட்டிடு தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவானது தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் தானும் தன் காதலியும் ஜனவரி 10 முதல் 14 ஆம் தேதி வரை கோவாவில் உள்ள ஹோட்டல் வைப்ஸ் இன் என்ற ஹோட்டலில் தங்கி இருந்தோம். நாங்கள் தங்கி இருந்த பொழுது எந்த பிரச்சனையும் வரவில்லை. நாங்கள் கடைசி நாள் ரூமினை காலி செய்து செல்லும் முன் எனது காதலி அங்கிருந்த பொது கழிவறையை பயன்படுத்தினார். அப்போது அந்த கழிவறையில் ஹோட்டல் உரிமையாளர் எட்டிப் பார்த்துள்ளார். இதனைக் கண்ட அவரின் காதலியோ பயத்தில் துடித்து ஓடி வந்துள்ளார். இது குறித்து நாங்கள் காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். Road Accident: ஏழுமலையானை தரிசித்து விட்டு திருச்சி திரும்பிய பேருந்து.. லாரி மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு.!

கழிவறையை எட்டிப் பார்த்த ஹோட்டல் உரிமையாளர்:

Vacation Turned Into A Nightmare at Goa.

byu/Sagar_Rajani inLegalAdviceIndia

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)