Ravindra Jadeja Great Rhythm: ஒரே மேட்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, பவுலிங்கில் ரிதம் கண்ட ஜடேஜா.! அசத்தல் பேட்டி.!
இந்திய அணியின் அல் ரவுண்டராக இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் ஒரே ஆளாக 5 விக்கெட்டுகளை தட்டித்தூக்கி, தனக்கு வழங்கப்பட்ட 22 ஓவரில் மொத்தமாக 47 ரன்கள் மட்டுமே அடிக்கவிட்டார்.
பிப்ரவரி 09: இந்தியா (India) வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் (Australia Cricket Team) அணி, 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியின் முதல் நாள் மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் உள்ள ஜம்தா விதர்பா கிரிக்கெட் சங்க (Vidarbha Cricket Association Stadium - VCA Stadium) மைதானத்தில் வைத்து நடைபெற்றது. போட்டியின் முதல் ஆட்டத்தில் 177 ரன்களுக்கு 10 விக்கெட்டையும் ஆஸ்திரேலிய அணி இழந்தது. ஆஸ்திரேலிய சார்பில் விளையாடியவர்களில் மர்னஸ் 123 பந்துகளில் 49 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 107 பந்துகளில் 37 ரன்களும், பீட்டர் 84 பந்துகளில் 34 ரன்களும் அடித்தனர். ஜடேஜாவின் (Ravindra Jadeja) பந்துவீச்சு இன்று 5 விக்கெட்டுகளை அவருக்கு எடுத்து தந்தது. தான் வீசிய 22 ஓவரில் 47 ரன்கள் மட்டுமே எதிரணிகளை அடிக்க விட்டிருந்தார். ஆட்ட நாயகனாக, ஆல் ரவுண்டராக பல சாதனைகளை செய்த ரவீந்திர ஜடேஜா என்ற ஜட்டு (Jaddu), "இன்று எனது பந்துவீச்சில் சிறந்த ரிதம் கண்டேன்" என்று கூறினார்.Turkey Death Toll Cross Fukushima Disaster: ஜப்பானின் 2011 பேரழிவு மனித பலியை தாண்டியது துருக்கி-சிரியா மரண எண்ணிக்கை.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!
🗣️🗣️ I found great rhythm with my bowling today#TeamIndia all-rounder @imjadeja reflects on his super five-wicket haul on Day 1️⃣ of the first #INDvAUS Test.@mastercardindia pic.twitter.com/PBo8camct0
— BCCI (@BCCI) February 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 09:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

