Team India Squad for IND Vs BAN: இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.! விபரம் உள்ளே.!

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், முதல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி சென்னையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

Team India Squad for IND Vs BAN: இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.! விபரம் உள்ளே.!
Team India Squad for Test Series (Photo Credit: @BCCI X)

செப்டம்பர் 09, புதுடெல்லி (Cricket News): இந்தியாவுக்கு வருகை தந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் (IND Vs BAN) 2 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. செப்.19ம் தேதி நடைபெறும் டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கம் மா. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்திலும், செப். 27ம் தேதி நடைபெறும் டெஸ்ட் தொடர் கான்பூர் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறுகிறது. அதேபோல, அக்.06 அன்று தொடங்கும் டி20 போட்டி குவாலியர் கிரிக்கெட் மைதானத்திலும், அக்.09 அன்று நடைபெறும் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறுகிறது. இதனால் நேற்று பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது. முதல் டெஸ்ட் தொடருக்கான போட்டியில் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துகிறார். அவர் தலைமையிலான அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Paralympics 2024: கோலாகலமாக இன்றுடன் நிறைவுபெறுகிறது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 2024: கூகுளின் அசத்தல் டூடுல்.! 

பிசிசிஐ வெளியிட்ட இந்திய (Team India Squad for IND Vs BAN Test Series 2024) அணியினரின் பட்டியல்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).