Nicholas Pooran Retirement: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு.. வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஷாக் நியூஸ்..!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
ஜூன் 10, ட்ரினிடாட் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். அதிரடியாக விளையாடும் பாணியை கொண்ட இவர், உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் எதிர்கால நாயகன் என கூறப்பட்டு வந்த நிலையில், தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 1983 ரன்களும், 106 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி, 2275 ரன்களும் அடித்துள்ளார். SS Vs TGC: டிஎன்பிஎல் 7வது லீக் போட்டி.. சேலம் - திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை..!
நிக்கோலஸ் பூரன் ஓய்வு:
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 10, 2025 05:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

