Mobile Snatching: நொடிப்பொழுதில் செல்போனை களவாடிய இளைஞர்; சிசிடிவி கேமிராவில் அம்பலமான உண்மை.!

யாரும் எதிர்பாராத வகையில், கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞன் ஒருவன் செல்போனை திருடிக்கொண்டு சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Mobile Snatching in Vaniyambadi (Photo Credit: @ETVBharatTN X)

செப்டம்பர் 19, வாணியம்பாடி (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில், உறவினரின் துக்க நிகழ்வுக்காக நபர் ஒருவர் பூக்கடையில் பூ வாங்க வந்திருந்தார். அவர் தனது மேல் சட்டைப்பையில் தனது செல்போனை வைத்திருந்த நிலையில், அதன் மதிப்பு ரூ.1 இலட்சம் என கூறப்படுகிறது. அவர் பூ வாங்க மும்மரமாக இருந்தபோது, செல்போனை நோட்டமிட்டவாறு இருந்த நபர் ஒருவர், நொடிப்பொழுதில் யாரின் கண்களுக்கும் தெரியாமல் செல்போனை களவாடி சென்றார். தனது செல்போன் மாயமானதை கூட உணராமல் அவரும் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், பின் தாமதமாக செல்போன் மாயமானதை கண்டறிந்துள்ளார். இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது சிசிடிவி கேமிராவில் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, அதிகாரிகள் அடையாளம் தெரியாத நபரை, சிசிடிவி கேமிரா உதவியுடன் தேடி வருகிறார்கள். Nanganalur Vetrivel Cinemas: ரூ.60 இலட்சம் வரி பாக்கி; நங்கநல்லூர் வெற்றிவேல் சினிமாஸ்-க்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.!

சட்டைப்பையில் இருந்த செல்போனை திருடிவிட்டு ஓட்டம்பிடித்த நபரை காட்டிக்கொடுத்த சிசிடிவி: 

வீடியோ நன்றி: இ டிவி பாரத் தமிழ்நாடு  

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement