Karnataka Man Dies of Sudden Heart Attack (Photo Credit : @karnatakaportf X)

நவம்பர் 23, கர்நாடகா (Karnataka News): இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் பல்வேறு மாரடைப்பு மரணங்கள் திடீரென நடப்பது மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்து வருகிறது. சிறுவயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாரடைப்பால் இயல்பாக மரணம் அடைவது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் இது போன்ற ஒரு சோகம் தற்போது நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா, ஹலகூர் பகுதியில் செயல்பட்டு வரும் பெயிண்ட் கடையில் 58 வயதுடைய நபர் ஒருவர் பெயிண்ட் வாங்க வந்திருந்தார். தினமும் டார்ச்சர்.. நெஞ்சில் பச்சை குத்தினேன்.. காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை கொன்ற இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்.!

மயங்கி விழுந்து உயிரிழப்பு:

கடை உரிமையாளரிடம் அவர் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி சரிந்தவர் மாரடைப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மீட்ட கடை உரிமையாளர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் அங்குள்ள ஹுல்லாகல கிராமத்தைச் சேர்ந்த இரணையா என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பெயிண்ட் வாங்க வந்தவர் கடை உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெயிண்ட் வாங்க சென்றபோது மாரடைப்பால் மரணம்: