Tiruvannamalai ATM Robbery Case: தமிழகத்தை உலுக்கிய ஏ.டி.எம் கொள்ளையில் 2 குற்றவாளிகள் அதிரடி கைது..!
காவலாளிகள் இல்லத்தை ஏ.டி.எம் மையங்களை நோட்டமிட்டு திட்டமிட்டு திருட்டு செயலில் ஈடுபட்ட கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறருக்கு தமிழ்நாடு தனிப்படை காவல்துறை அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
பிப்ரவரி 17: திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்டத்தில் 40 கி.மீ தூரத்தில் அடுத்தடுத்து காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம் (ATM Money Robbery) மையங்கள் குறிவைக்கப்பட்டு கடந்த 12ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை (Tiruvannamalai Police) தனிப்படை காவல் துறையினர் ஹரியானா (Haryana Thief) மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் ஆரிப், ஆசாத் ஆகியோரை இன்று கைது செய்துள்ளனர். இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் பேரில் பிறருக்கும் வலைவீசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் திருப்பதியில் (Tirupati, AndraPradesh) டாடா சுமோ வாகனத்தை திருடி, கர்நாடகாவின் கே.ஜி.எப்-பில் (KGF, Karnataka) தனியார் ஓட்டலில் தங்கியிருந்து நோட்டமிட்டு திருட்டு செயலில் ஈடுபட்டதும் அம்பலம் ஆகியுள்ளது. கைதானவர்கள் ஹரியானாவில் இருந்து தி.மலைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். IPL 2023 Schedule Tamil: 2023 ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியானது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. முழு விபரம் உள்ளே.!
*திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம் மையத்தில் ரூ.75 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்..
*ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளைக்கும்பல் தலைவன் ஆரிப், உறவினர் ஆசாத் ஆகியோரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது..
*விரைவில் அவர்கள் தமிழகம் அழைத்து வரப்படவுள்ளனர்.#Tiruvannamalai pic.twitter.com/LjiRppmuL7
— Sriramrpckanna (@Sriramrpckanna1) February 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 17, 2023 08:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

