Youngster Turned Thief: இன்ஸ்டாகிராம் காதலிக்கு கிப்ட் கொடுக்க பக்கத்து வீட்டில் நகை களவாடிய இளைஞர் கைது..! சிவராத்தியில் நோட்டமிட்டு கைவரிசை.!

சிவராத்திரியன்று கோவிலுக்கு அண்டை வீட்டார்கள் செல்வதை நோட்டமிட்டு, இன்ஸ்டாகிராம் காதலியை உற்சாகப்படுத்த பரிசு வாங்க வேண்டி நகைகள் திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நெட்டிசன்களிடையே ட்ரோல் மெட்டிரியலராக சிக்கியுள்ள இளைஞரின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Youngster Turned Thief: இன்ஸ்டாகிராம் காதலிக்கு கிப்ட் கொடுக்க பக்கத்து வீட்டில் நகை களவாடிய இளைஞர் கைது..! சிவராத்தியில் நோட்டமிட்டு கைவரிசை.!
Vellore Youngster Turned Thief, When He Impress Love Girl (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 21, வேலூர்: வேலூர் (Vellore) நகர் பகுதியை சேர்ந்த நரேஷ் குமார், மகா சிவராத்திரி (Maha Sivarathri) அன்று குடும்பத்தினரோடு வேலூர் கோட்டை (Vellore Port) ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தார். திரும்பி வீட்டிற்கு வந்த போது பீரோவில் இருந்த 11 சவரன் நகை, 250 கிராம் வெள்ளிப்பொருட்கள் மாயமாகியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜ்குமார் (வயது 19) என்ற இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் இன்ஸ்டாகிராம் (Instagram Love) காதலிக்கு காதல் பரிசு கொடுக்க பணம் இல்லாததால் பக்கத்து வீட்டில் கைவரிசை காண்பித்தது அம்பலமானது. காதலுக்கு கண்கள் இல்லை என்றாலும், திருட்டு வழியான உழைப்பு நிச்சயம் அதற்கான தண்டனையை பெற்றுத்தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். Fire Broken Apartment Building: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. ஒருவர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 21, 2023 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).