செப்டம்பர் 18, டெல்லி (Technology News): கூகுள் இந்தியா தனது பிளாட்ஃபார்மான கூகுள் பேக்கு (Google Pay) பிறந்தநாள் வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் (Digital Payment) தளமானது முதன் முதலில் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி இந்தியாவில் 'Tez' என அறிமுகமானது. பின்னர், கூகுள் பே அல்லது ஜிபே (GPay) என மறுபெயரிடப்பட்டது. கூகுள் நிறுவனம் தனது கூகுள் வாலட்டை (Google Wallet) 2011-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது இந்த ஆண்டு மே மாதம் 08-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மத்தியில் GPay பிரபலமாக பார்க்கப்படுகின்றது. Amazon Great Indian Festival 2024: அமேசான் கிரேட் இந்தியன் சேல் 2024.. எப்போது தெரியுமா?!
GPay பிறந்தநாள் வாழ்த்து பதிவை வெளியிட்ட கூகுள் இந்தியா:
HBD HBD HBD HBD HBD HBD HBD GPay 🥰🍰 pic.twitter.com/BpaQljz1eF
— Google India (@GoogleIndia) September 18, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)