செப்டம்பர் 07, புதுடெல்லி (Technology News): இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chathurthi) விழா கோலாகலமாக இன்று (செப்டம்பர் 07) கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள கூகுள் (Google India) நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை (Kozhukattai) வைத்து, கூகுள் நிறுவனத்தின் அடையாளமாக 'G' வடிவத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. கொழுக்கட்டை வைத்து ஜி வடிவில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. Ganesh Chathurthi: வினைகளை வேரறுக்கும் பிள்ளையார்; விநாயகர் சதுர்த்தி.. நல்வாழ்த்துகள்..!
'G' வடிவில் புகைப்படம் வெளியிட்ட கூகுள் இந்தியா:
Call it Modak, Kadubu, Mandaa, Kozhukattai or Jilledukayalu…the joy of celebrating this time of the year is incomplete without them 😋🧡 pic.twitter.com/KvYQqvY8Ev
— Google India (@GoogleIndia) September 7, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)