England MP Bob Blackman: இந்திய தேசிய கொடி காலிஸ்தானிய ஆதரவாளர்கள் போராட்ட விவகாரம்; இங்கிலாந்து எம்.பி அதிரடி கருத்து.!

இந்தியாவில் தனிப்பெரும் சமூகமாக வாழ்ந்து வரும் சீக்கியர்களில் ஒருதரப்பு தங்களுக்கு என தனியொரு நாடாக காலிஸ்தானை கேட்டு போராடி வருகிறது. இந்த குழு உலகளவிலும் இந்தியாவுக்கு எதிரான போராட்டம் நடத்தி வருகிறது.

England MP Bob Blackman (Photo Credit: ANI)

மார்ச் 21, இலண்டன் (World News): இங்கிலாந்து (England) நாட்டில் உள்ள இலண்டனில் இருக்கும் இந்திய அலுவலகத்தை முற்றுகையிட்ட காலிஸ்தானிய ஆதரவாளர்கள் (Khalistani Supporters), இந்திய தேசிய கொடியை (India National Flag) அகற்ற முயற்சித்தனர். இதனை கண்ட பாதுகாப்புத்துறை அதிகாரி, அவர்கள் முயற்சியை முறியடித்து தேசிய கொடியை பாதுகாத்தார். இந்த விஷயம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக் மேன் (England MP Bob Blackman), "சீக்கிய சமூகத்தில் மிகச்சிறிய பிரிவாக பிரிந்து காலிஸ்தானிய ஆதரவாளர்கள் செயல்படுகிறார்கள். பெரும்பான்மை சீக்கியர்கள் காலிஸ்தானிய விவகாரத்தை நிராகரிக்கின்றனர். எனது செய்தி காவல்துறைக்கு மிகவும் எளிமையானது, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சரியான முறையில் கையாளப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். Vanangaan Actress Issue: துணை நடிகைக்கு கன்னத்தில் பளார் விட்ட ஒருங்கிணைப்பாளர்; பாலாவின் வணங்கான் படப்பிடிப்பு தளத்தில் சம்பவம்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement