Indian Student in US Died: இந்திய மாணவி அமெரிக்காவில் மரணம்; தொடரும் சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

ஓஹியோ மாகாணத்தில் வசித்து வந்த இந்திய மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கிறார். அவரின் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Death File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 06, வாஷிங்க்டன் டிசி (Washington DC): அமெரிக்காவில் சென்று மேற்படிப்பை தொடரும் இந்திய மாணவர்கள் இன ரீதியான தாக்குதல் மற்றும் விபத்து, உடல்நல கோளாறு என அடுத்தடுத்து தங்களது உயிரை இழக்கும் சூழல் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக இந்திய மாணவர்கள் மரணிப்பதும், அவர்களின் உடலை (US Indian Student Uma Satya Died) இந்தியாவிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கையை எடுப்பதும் தொடருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் உள்ள க்ளீவ்லேண்ட் நகரில் வசித்து வரும் இந்திய மாணவி உமா சத்திய சாய் கன்டே மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தகவல் இந்திய தூதரகத்தின் வாயிலாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. Germany Cops Uniform: பேண்ட் இல்லாமல் பணிக்கு வரும் காவலர்கள்; ஜெர்மனியில் சர்ச்சை சம்பவம்.. காரணம் என்ன?..! 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement