பிப்ரவரி 14, டெக்ஸாஸ் (World News): அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணம், ஆஸ்டின் நகரில் செயின்ட் டேவிட் வடக்கு ஆஸ்டின் மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று நோயாளிகளுடன் (Car Crash in Texas) வந்திருந்தவர்கள், அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் அமர்ந்து இருந்தனர். அச்சமயம், திடீரென தறிகெட்டு இயங்கிய கார் ஒன்று, கதவை தாண்டி உள்ளே வந்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் நடந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின் காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். International Condom Day 2024: சர்வதேச ஆணுறை தினம் இன்று; ஆணுறை பயன்படுத்தவேண்டியதன் அவசியம், நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)