DD Vs TGC Eliminator: திண்டுக்கல் - திருச்சி அணிகள் இன்று மோதல்.. வெற்றி பெறப்போவது யார்..?

2025 டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டியில், இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதுகின்றன.

DD Vs TGC Eliminator (Photo Credit: @TNPremierLeague X)

ஜூலை 02, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கியது. நடப்பு தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெற்று முடிந்தன. தொடரில், 28 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. இப்போட்டிகள், அனைத்தும் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. DD Vs TGC, Eliminator: எலிமினேட்டர் போட்டி.. திண்டுக்கல் - திருச்சி அணிகள் பலப்பரீட்சை..!

திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (Dindigul Dragons Vs Trichy Grand Cholas):

இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழஸ் (DD Vs TGC) அணிகள் இன்று (ஜூலை 02) எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் தோல்வியடையும் அணியுடன் ஜூலை 04ஆம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றுப்போட்டியில் மோதும். இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், திண்டுக்கல் அணி 2 போட்டியிலும், திருச்சி அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

நேரலை விவரம்:

அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள்:

ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), சிவம் சிங், பாபா இந்திரஜித், மான் பாஃப்னா, ஆர் கே ஜெயந்த், ஹன்னி சைனி, எம் கார்த்திக் சரண், வருண் சக்கரவர்த்தி, டிடி சந்திரசேகர், சந்தீப் வாரியர், கணேசன் பெரியசுவாமி, விமல் குமார், ராஜ்விந்தர் சிங், எம் விஜு அருள், அதுல் விஜு அருள், அடுலேஷ் அருள்.

திருச்சி கிராண்ட் சோழஸ் அணி வீரர்கள்:

வசீம் அகமது, ஜெயராமன் சுரேஷ் குமார் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால், ஆர் ராஜ்குமார், யு முகிலேஷ், பி சரவண குமார், சுஜய் சிவசங்கரன், எம் கணேஷ் மூர்த்தி, வி அதிசயராஜ் டேவிட்சன், கே ஈஸ்வரன், டி சரண், எஸ்.எஸ்.பி வினோத் சரண், ஜே.எஸ்.பி. குமரன், வாஷிங்டன் சுந்தர், ஆண்டனி தாஸ்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement