DD Vs TGC Eliminator: சுழல் ஜாலம் காட்டிய அஸ்வின், வருண் சக்கரவர்த்தி.. திண்டுக்கல் வெற்றிக்கு 141 ரன்கள் இலக்கு..!

2025 டிஎன்பிஎல் திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில், திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 140 ரன்கள் அடித்துள்ளது.

DD Vs TGC Eliminator 1st Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூலை 02, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கியது. நடப்பு தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெற்று முடிந்தன. தொடரில், 28 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. இப்போட்டிகள், அனைத்தும் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. DD Vs TGC Eliminator, Toss: திண்டுக்கல் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. 2வது தகுதி சுற்றுக்கு செல்ல போவது யார்..?

திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (Dindigul Dragons Vs Trichy Grand Cholas):

முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில், திருப்பூர் அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில், தோல்வியடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ஜூலை 04ஆம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றுப்போட்டியில் மோதும். இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழஸ் (DD Vs TGC) அணிகள் இன்று (ஜூலை 02) எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

திண்டுக்கல் அபார பந்துவீச்சு:

அதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணிக்கு தொடக்க வீரர்கள் வசீம் அகமது 36, கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் 23 ரன்கள் அடித்து அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்குமார் அஸ்வின் சுழலில் சிக்கினார். சற்று அதிரடியாக விளையாடிய ஜாபர் ஜமால் 33 ரன்னில் அவுட்டானார். திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 140 ரன்கள் அடித்தது. திண்டுக்கல் அணி சார்பில் அஸ்வின் 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் பெரியசாமி தலா 2, சசிதரன் ரவிச்சந்திரன் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

நேரலை விவரம்:

அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement