Champions of Cricket: உலகளவில் எப்போதும் மறக்க இயலாத தலைசிறந்த 50 கிரிக்கெட் ஜாம்பவான்கள்.. தோனி, சச்சின், விராட்க்கு எந்த இடம் தெரியுமா?..!
நாட்டிற்காக தலைசிறந்து விளையாடும் வீரர் முதல், சர்வதேச அளவில் பல திறமைகளை கொண்ட வீரர்களுக்கும் நாட்டின் எல்லை கடந்து ரசிகர்கள் இருக்கின்றனர்.
டிசம்பர், 7: கிரிக்கெட் போட்டி நம்மிடையே அறிமுகம் ஆனதில் இருந்து, அதற்கு கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருந்து வருகிறோம். உலகக்கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் தொடர், 20 ஓவர் போட்டி, ஐ.பி.எல் என எது நடந்தாலும் சலிக்காமல் அதனை கண்டுகளிக்க கூட்டமே காத்திருக்கிறது.
நம்மிடையே கிரிக்கெட் (Cricket) எந்த அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியதோ, அதனைப்போலவே கிரிக்கெட் வீரர்கள் நம்மிடம் இருந்து பிரிக்க இயலாத இடத்தினை பெற்றுவிட்டனர். இதில், நாட்டிற்காக தலைசிறந்து விளையாடும் வீரர் முதல், சர்வதேச அளவில் பல திறமைகளை கொண்ட வீரர்களுக்கும் நாட்டின் எல்லை கடந்து ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் பலரை நம்மால் மறக்க இயலாது. அவ்வாறான 50 வீரர்கள் குறித்த தகவலை இன்று காணலாம்.
- சச்சின் தெண்டுல்கர் (Sachin Tendulkar): இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் கிரிக்கெட் ரசிகர்களிடையே உச்சரிக்கப்படும் ஒரே பெயர், உலகளவில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முதல் இடத்திற்கு சொந்தக்கரரர் சச்சின் தெண்டுல்கர். பேட்ஸ்மேன்கள் ஜாம்பவானாக வாழும் சச்சின் உலகளவில் தலைசிறந்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தினை பெறுகிறார்.
- டான் ப்ராட்மேன் (Don Bradman) : ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரான டான், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்தவர் ஆவார். இவர் பேட்ஸ்மேன்கள் தலைசிறந்த நாயகனாகவும் கருதப்படுகிறார்.
- கார்பீல்ட் சொபேர்ஸ் (Garfield Sobers): மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், விளையாட்டில் கண்மூடித்தனமாக கனகச்சிதமாக விளையாடும் தலைசிறந்த வீரராகவும் இருப்பவர் கார்பீல்ட்.
- சர் விவ் ரிச்சர்ட் (Viv Richards): பந்தின் வேகம் மற்றும் அதனை வீசும் வீரரை கணக்கில் எடுத்துக்கொண்டு, துல்லியமாக அதனை எதிர்கொள்ளும் வீரர் என்று உலகளவில் கவனிக்கப்பட்டவர் சர் விவ் ரிச்சர்ட். NaturalBeauty: உங்களின் சருமத்தை அழகாக, எழிலுடன் வைத்துக்கொள்ள வேண்டுமா?.. தினமும் இதனை செய்ய தவறாதீர்கள்.!
- இம்ரான் கான் (Imran Khan): பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 1992ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உலககோப்பையை கைப்பற்ற வழிநடத்தி சென்று விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆவார். இவர் சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் 5ம் இடத்தை பெறுகிறார்.
- இயன் போதம் (Ian Botham): இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக, விளையாட்டில் மன்னாதி மன்னனாக கவனிக்கப்பட்டவர் இயன் போதம். இவர் இப்பட்டியலில் 6ம் இடத்தில் இருக்கிறார்.
- ஷேன் வார்னே (Shane Warne): ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின் பந்துவீச்சாளர், லெக்-ஸ்பின்னில் சுழற்றியடிக்கும் திறமை கொண்டவர் வார்னே. இவர் விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் தலைசிறந்த ஆட்டக்காரரும் ஆவார்.
- முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan): ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், தலைசிறந்த ஸ்பின்னர், அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமைக்குரியவர் முத்தையா முரளிதரன். இவர் இப்பட்டியலில் 8ம் இடத்தில் இருக்கிறார்.
- பிரையன் லாரா (Brian Lara): மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் இடதுகை கிரிக்கெட் வீரராக அறிமுகமாகி, தனது பாணியில் பல வெற்றிகளை குவித்து உலகளவில் கவனிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர் பிரையன் லாரா. இவருக்கு பட்டியலில் 9ம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விராட் கோஹ்லி (Virat Kholi): இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லி, தனது திறமையால் பல சாதனைகளை குவித்து உலகளவில் மக்களிடம் வரவேற்பை பெற்ற வீரர்களில் 10ம் இடத்தை பெறுகிறார். பிற 40 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:
- ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா),
- எம்.எஸ் தோனி MS Dhoni (இந்தியா),
- வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்),
- குமார் சங்கக்கார (இலங்கை),
- கபில் தேவ் Kabil Dev (இந்தியா),
- சர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் (வெஸ்ட் இண்டீஸ்),
- மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை),
- ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து),
- சர் அலஸ்டர் குக் (இங்கிலாந்து),
- சர் ரிச்சர்ட் ஹாட்லீ (நியூசிலாந்து),
- ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா),
- டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா),
- ஆலன் டொனால்ட் (தென் ஆப்பிரிக்கா),
- கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்),
- கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா),
- ராகுல் டிராவிட் (இந்தியா),
- சுனில் கவாஸ்கர் (இந்தியா),
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா),
- ஸ்டீவ் வா (ஆஸ்திரேலியா),
- சோயிப் அக்தர் (பாகிஸ்தான்),
- வீரேந்திர சேவாக் (இந்தியா),
- WH கிரேஸ் (இங்கிலாந்து),
- ரிச்சர்ட் ஹாட்லீ (நியூசிலாந்து),
- சனத் ஜெயசூர்யா (இலங்கை),
- ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா),
- ஷான் பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா),
- ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா),
- ஸ்டீபன் ஃப்ளெமிங் (நியூசிலாந்து),
- பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து),
- லான்ஸ் க்ளூஸனர் (தென் ஆப்பிரிக்கா),
- இன்சமாம் உல்-ஹக் (பாகிஸ்தான்),
- வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்),
- ஜாகீர் அப்பாஸ் (பாகிஸ்தான்),
- சவுரவ் கங்குலி (இந்தியா),
- யுவராஜ் சிங் (இந்தியா),
- அனில் கும்ப்ளே (இந்தியா),
- மைக் ஹஸ்ஸி (ஆஸ்திரேலியா),
- மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா),
- ஜாக் ஹோப்ஸ் (இங்கிலாந்து),
- லசித் மலிங்கா (இலங்கை).