Proposal for Shubman Gill: வேறலெவல் ப்ரபோசல்! ஓவல் மைதானத்தில் ஷுப்னம் ஹில்லுக்கு காதல் ப்ரபோஸ் செய்த பெண்மணி..!
மக்கள் விரும்பும் நாயகனாக இருந்து, மங்கையின் மனம் கவர்ந்த நாயகனாக உயர்ந்த ஷுப்னம் ஹிலுக்கு, ஓவல் மைதானத்தில் இருந்து காதலுக்கான அழைப்பு விடுத்த பெண்மணி, தன்னை திருமணம் செய்ய கோரிக்கை வைத்த நிகழ்வு நடந்துள்ளது.
ஜூன் 10, இங்கிலாந்து (Cricket News): இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 வது நாள் ஆட்டத்தின் முடிவுகளின்படி 296 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு வெற்றி அடையுமா? அல்லது இறுதியில் நிகழப்போகும் மாயாஜாலம் என்ன? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் கட்டாயம் ரன்களை குவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. Karnataka HC: குழந்தையை ஒப்படைக்காத வரை பெண்ணின் சம்பளத்தை நிறுத்தி வைக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவு.. காரணம் என்ன தெரியுமா?..!
அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷுப்னம் ஹில். இவர் கடந்த 2018ல் இந்தியாவுக்கான 18 வயது குறைந்தோர் கிரிக்கெட் பிரிவில் துணை கேப்டனாகவும் திறம்பட செயல்பட்டு இருந்தார். தற்போது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் ஷுப்னம் ஹிலுக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக பெண் ரசிகைகள் அவருக்கு அதிகம். இந்த நிலையில், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு நேரில் சென்ற இளம்பெண், ஷுப்னம் தன்னை திருமணம் செய்யக்கூறி பதாகை ஏந்தினார்.
Proposal for Shubman Gill at the Oval. pic.twitter.com/76hpNoPlbi
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 9, 2023
(The above story first appeared on LatestLY on Jun 10, 2023 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

