AFG Vs BAN 2nd T20I, Toss: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20ஐ.. வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டி20ஐ போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

AFG Vs BAN 2nd T20I, Toss (Photo Credit: @ACBofficials X)

அக்டோபர் 03, ஷார்ஜா (Sports News): ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில், நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் - வங்கதேச (AFG Vs BAN) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி, இன்று (அக்டோபர் 03) இரவு 8 மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. RSAW Vs ENGW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; தென்னாப்பிரிக்கா மகளிர் படுதோல்வி.. இங்கிலாந்து மகளிர் அணி இமாலய வெற்றி..!

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் (Afghanistan Vs Bangladesh):

ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஜேக்கர் அலி தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 13 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளிலும், வங்கதேச அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, வஃபியுல்லா தாரகில், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, அப்துல்லா அஹ்மத்சாய், ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான்.

வங்கதேச அணி வீரர்கள்:

தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹாசன், ஜேக்கர் அலி (கேப்டன்), நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், நாசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement