IND Vs AUS, 4th T20I: ஆஸ்திரேலியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது டி20ஐ போட்டியில், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND Vs AUS, 4th T20I (Photo Credit: @BCCI X)

நவம்பர் 06, குயின்ஸ்லாந்து (Sports News): இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2-1 என தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, நடைபெற்ற 3 டி20ஐ போட்டிகளின் முடிவில், 1-1 என தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா (IND Vs AUS T20I) அணிகள் மோதிய 4வது டி20ஐ போட்டி, குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று (நவம்பர் 06) நடைபெற்றது. PAK Vs SA 2nd ODI, Toss: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா 2வது ஓடிஐ.. பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

இந்தியா எதிர் ஆஸ்திரேலியா டி20ஐ தொடர் (India Vs Australia T20I Series 2025):

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 46 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 18.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 30 ரன்கள் அடித்தார். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3, அக்சர் படேல் மற்றும் சிவம் துபே தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்மூலம், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், பென் ட்வார்ஷுயிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா.

இந்திய அணி வீரர்கள்:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement