Malaysia Masters 2024: மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டி.. அரை இறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!
மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மே 24, மலேசியா (Sports News): மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2024 (Malaysia Masters) தொடர் கடந்த மே 21ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து (PV Sindhu) சீனா வீராங்கனையான ஹான் யூ-வை (Han Yue) எதிர்த்து போட்டியிட்டார். TN Weather Report: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
அதில் பி.வி.சிந்து 21-13, 14-21 மற்றும் 21-12 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் யூ-வை தோற்கடித்தார். இதையடுத்து, இந்த வெற்றிக்குப் பிறகு மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியால் மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் போட்டியில் பி.வி.சிந்து 5வது இடத்தில் உள்ளார்.
(The above story first appeared on LatestLY on May 24, 2024 06:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

