BAN Vs PAK 2nd T20I: பாகிஸ்தான் 125 ரன்னுக்கு ஆல் அவுட்.. வங்கதேச அணி அபார வெற்றி..!

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில், வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

BAN Vs PAK 2nd T20I: பாகிஸ்தான் 125 ரன்னுக்கு ஆல் அவுட்.. வங்கதேச அணி அபார வெற்றி..!
BAN Vs PAK 2nd T20I 2nd Batting (Photo Credit: @BCBtigers X)

ஜூலை 22, தாக்கா (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அனைத்து போட்டிகளும், தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும். இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஃபேன் கோட் செயலியில் நேரலையில் பார்க்கலாம். நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. BAN Vs PAK 2nd T20I: ஜேக்கர் அலி அரைசதம் விளாசல்.. பாகிஸ்தான் வெற்றி பெற 134 ரன்கள் இலக்கு..!

வங்கதேசம் எதிர் பாகிஸ்தான் (Bangladesh Vs Pakistan):

இந்நிலையில், வங்கதேசம் - பாகிஸ்தான் (BAN Vs PAK) அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று (ஜூலை 22) நடைபெற்றது. லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேக்கர் அலி 55 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்சா, அகமது டேனியல், அப்பாஸ் அப்ரிடி தலா 2 விக்கெட், ஃபஹீம் அஷ்ரப் மற்றும் முகமது நவாஸ் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

வங்கதேசம் வெற்றி:

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். பாகிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் 47 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது, ஜோடி சேர்ந்த ஃபஹீம் அஷ்ரப் - அப்பாஸ் அப்ரிடி இணை அதிரடியாக விளையாடினர். இறுதியில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஃபஹீம் அஷ்ரப் தனி ஆளாக போராடி அரைசதம் (51 ரன்கள்) கடந்தார். இதன்மூலம், வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி, நாளை மறுநாள் (ஜூலை 24) நடைபெறும்.

வங்கதேசம் (பிளேயிங் லெவன்):

பர்வேஸ் ஹொசைன் எமன், முகமது நைம், லிட்டன் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஜேக்கர் அலி, ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.

பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்):

ஃபகார் ஜமான், சைம் அயூப், முகமது ஹாரிஸ், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், குஷ்தில் ஷா, அப்பாஸ் அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரப், சல்மான் மிர்சா, அகமது டேனியல்.

(The above story first appeared on LatestLY on Jul 22, 2025 09:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).