BAN Vs NED 3rd T20I: மழையால் ஆட்டம் பாதியில் ரத்து.. நெதர்லாந்திற்கு எதிரான டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்..!

வங்கதேசம் எதிர் நெதர்லாந்து (BAN Vs NED T20I) அணிகள் மோதிய 3வது டி20 போட்டி, மழைக் காரணமாக ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

BAN Vs NED 3rd T20I (Photo Credit: @somoytv X)

செப்டம்பர் 03, சில்ஹெட் (Sports News): நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டியிலும், வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேசம் - நெதர்லாந்து (BAN Vs NED) அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, இன்று (செப்டம்பர் 03) சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்றது. ZIM Vs SL 1st T20I: ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் டி20.. வெற்றியுடன் தொடங்கியது இலங்கை அணி..!

வங்கதேசம் எதிர் நெதர்லாந்து (Bangladesh Vs Netherlands):

லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி அதிரடியாக விளையாடியது. அப்போது, 4.1 ஓவரில் 60-1 என்ற நிலையில், மழைக் குறுக்கிட்டது. இதனால் அரை மணிநேரம் கழித்து ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய வங்கதேச அணி 18.2 ஓவர்களில் 164-4 என்ற நிலையில் இருந்தது. அப்போது, கனமழை பெய்யத் தொடங்கியது. நீண்ட நேரமாக மழை தொடர்ந்து பெய்து வந்ததால், ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்கள் அடித்தார். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேச அணி 2-0 என கைப்பற்றியது.

வங்கதேசம் அணி வீரர்கள்:

லிட்டன் தாஸ் (கேப்டன்), சைஃப் ஹாசன், தவ்ஹித் ஹிரிடோய், ஜேக்கர் அலி, ஷமிம் ஹொசைன், நூருல் ஹசன், தன்சிம் ஹசன் சாகிப், ரிஷாத் ஹொசைன், முகமது சைபுதீன், நசும் அகமது, ஷோரிபுல் இஸ்லாம்.

நெதர்லாந்து அணி வீரர்கள்:

மேக்ஸ் ஓடோவ்ட், விக்ரம்ஜித் சிங், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஷாரிஸ் அகமது, நோவா குரோஸ், டிம் பிரிங்கிள், கைல் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென், டேனியல் டோரம்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement