IND Vs WI Squad: ரோஹித் ஷர்மா தலைமையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்திய அணி; பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ.!

10 போட்டிகள் கொண்ட விளையாட்டை மேற்கிந்திய தீவுகள் அணியுடன் எதிர்கொள்ளவுள்ள இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் பி.சி.சி.ஐ நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

IND Vs WI Squad: ரோஹித் ஷர்மா தலைமையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்திய அணி; பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ.!
Indian Squad Against West Indies 2023 (Photo Credit: BCCI)

ஜூன் 23, புதுடெல்லி (Sports News): வங்கதேச நாட்டிற்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் என மொத்தம் 10 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் 12 ஜூனில் தொடங்கி 13 ஆகஸ்டில் நிறைவு பெறுகிறது.

இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ ஏற்கனவே வழங்கியிருந்த நிலையில், தற்போது வங்காளதேச அணியுடன் மோதவுள்ள இந்திய அணியின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை ரோஹித் சர்மா வழிநடத்துகிறார்.

ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா (விசி), ஷர்துல் தாக்கூர், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (விசி), கேஎஸ் பாரத் (வி.கே), இஷான் கிஷன் (வி.கே.), ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jun 23, 2023 07:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).