Connor Shields Contract Extension In Chennaiyin FC: சென்னை அணி வீரர் கானர் ஷீல்ட்ஸ் ஒப்பந்தம் நீட்டிப்பு; ரசிகர்கள் மகிழ்ச்சி..!
சென்னை அணி வீரர் கானர் ஷீல்ட்சின் ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ரசிகர்களுக்கு இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 24, சென்னை (Sports News): இந்தியன் சூப்பர் லீக் (ISL Football)கால்பந்து போட்டியில், முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்சி அணியில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி வீரர் கானர் ஷீல்ட்சின் ஒப்பந்தம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. Lok Sabha Speaker: 18 வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மஹதாப் பொறுப்பேற்பு.!
கானர் ஷீல்ட்ஸ் (வயது 26) முன்கள வீரரான இவர், கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை அணியில் இடம்பெற்றார். அவர், இதுவரை சென்னை அணிக்காக 27 ஆட்டங்களில் விளையாடி 5 கோல்கள் அடித்துள்ளார். இந்நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது சென்னை அணியின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கானர் ஷீல்ட்ஸ் கூறுகையில், 'சென்னையின் எப்சி-யில் நான் தங்கியிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், ரசிகர்களின் ஆதரவு மற்றும் காஃப் உடன் பணிபுரிதல் மற்றும் வரவிருக்கும் சீசனுக்காக நான் உற்சாகமாக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
(The above story first appeared on LatestLY on Jun 24, 2024 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

