IND vs ENG 5th Test: தற்போதைய ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரரின் இடத்தை பிடித்த... முன்னாள் ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரர்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது.

IND vs ENG 5th Test: தற்போதைய ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரரின் இடத்தை பிடித்த... முன்னாள் ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரர்..!
IND vs ENG 5th Test (Photo Credit: @CricketNDTV @HTSportsNews X)

மார்ச் 07, இமாச்சலப் பிரதேசம் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து (IND Vs ENG Test Series) கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும், தோல்வியிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி அடுத்தடுத்து 3 போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் (Dharamsala) தற்போது நடைபெற்று வருகிறது. Sharwanand and Rakshitha Reddy Welcome Newborn Daughter: 'எங்கேயும் எப்போதும்' ஷர்வானந்துக்கு இப்போது குழந்தை... குவியும் வாழ்த்துக்கள்!

இந்த போட்டியில் முன்னாள் ஆர்சிபி (RCB) நம்பிக்கை நட்சத்திர வீரர் ரஜத் படிதார் (Rajat Patidar) ராஞ்சியில் நடந்த டெஸ்டில் மற்றொரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் அவர்க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இந்த போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தற்போதைய ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரர் தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) களம் இறங்குகிறார்.

இரு அணிகளின் விவரம்:

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

இங்கிலாந்து அணி: சாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஷோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட்

(The above story first appeared on LatestLY on Mar 07, 2024 03:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).