IND Vs ENG Test: 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு... அறிமுக வீரராக களமிறங்கும் பஷீர்..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 01, ஹைதராபாத் (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி (IND vs ENG Test Series 2024), ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இதில் முதல் டெஸ்ட் போட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களும், இந்திய அணி 436 ரன்களும் எடுத்தது. இதை அடுத்து 190 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடர்ந்து சொதப்பலாக விளையாடி, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. RBI Stops Paytm Payments Bank: பேடிஎம் பயனாளர்களுக்கு அதிர்ச்சி.. முடிவுக்கு வந்தது பேடிஎம்..!
இங்கிலாந்து அணி: இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜாக் லீச் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் விளையாட வில்லை. அவருக்கு பதிலாக அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் களம் காண்கிறார்.
(The above story first appeared on LatestLY on Feb 01, 2024 03:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

