MS Dhoni in Ranchi: ராஞ்சியில் எம்.எஸ். தோனி பைக் ரைடிங்.. வைரலாகும் வீடியோ..!
ராஞ்சியில் எம்.எஸ். தோனி பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மே 21, ராஞ்சி (Sports News): ஐபிஎல் 2024 (IPL 2024) டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) லீக் சுற்றுடன் வெளியேறியது. தோல்வியை சந்தித்த சென்னை இப்போதும் 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணியாகவே ஜொலிக்கிறது. 42 வயதான தோனி, இந்த சீசனின் தொடக்கத்துக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். நடப்பு ஐபிஎல் சீசன் தோனி பங்கேற்று விளையாடும் கடைசி சீசனாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. Viral Video: அரசு பேருந்தா? கொசு வண்டி வாகனமா? வைரலாகும் வீடியோ..!
இந்நிலையில் சென்னை அணி தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பிறகு எம்எஸ் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பினார். அங்கு அவர் தனது யமஹா ஆர்டி 350 பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தோனி பைக் எவ்வளவு பிடிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் தோனி அவரது பைக்கில் சாதாரணமாக தெருக்களில் செல்லும் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆவது குறிப்பிடத்தக்கது.
MS Dhoni in Ranchi 💛 pic.twitter.com/gNHE0fiQyf
— 🎰 (@StanMSD) May 20, 2024
(The above story first appeared on LatestLY on May 21, 2024 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

