IND vs SA 2nd ODI: இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி... இந்தியா தோல்வி..!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

IND vs SA 2nd ODI: இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி... இந்தியா தோல்வி..!
IND vs SA 2nd ODI (Photo Credit: @sports_tak X)

டிசம்பர் 20, தென்னாபிரிக்கா (South Africa): தென்னாபிரிக்காவுக்கு எதிராக முதலில் நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்று முன்னிலையும் பெற்றது. IPL 2024: எந்த பிளேயர் எந்த அணியில் இருக்கிறார்? முழு விவரம் இதோ..!

இந்தியா தோல்வி: இதையடுத்து இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் விளையாடிய தென் ஆப்பரிக்கா அணி, 42.3 ஓவர்களிலேயே ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இதன் மூலம் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அவ்வளவு எளிதாக வீழ்ந்து விட மாட்டோம் என்பதை காண்பித்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Dec 20, 2023 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).