ஏப்ரல் 04, மும்பை (Sports News): ஐபிஎல் 2024 தொடரில் (IPL 2024) ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. அணியின் பின்னடைவிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதன்படி சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) இல்லாதது மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Ajith's Dangerous Car Stunt In Vida Muyarchi: கார்ல பெரிய ஜித்து.. பட்டைய கிளப்பும் அஜித்குமாரின் ஸ்டண்ட்.. வைரலாகும் வீடியோ..!

இந்நிலையில், சூரியகுமார் யாதவ் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி டெல்லிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் விளையாடுவதற்கான வாய்ப்புள்ளது. அப்படி இல்லையெனில் ஏப்ரல் 11ஆம் தேதி பெங்களூருவுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் சூரியகுமார் யாதவ் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.