Suryakumar Yadav Surgery Updates: சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை... மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சோகம்..!
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு குடலிறத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 09, புதுடெல்லி (New Delhi): இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) காயமடைந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் இவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்தது. இதனால் உடனடியாக நாடு திரும்பினார். மேலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். MILK CAKE RECIPE: சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி... பால் கேக் செய்வது எப்படி ?
சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை: இந்நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு குடலிறத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் சில போட்டிகளிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 06:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

