Forever Grateful Virat: "என்றென்றும் நன்றியுள்ளவராய்" - விளையாட்டுத்துறையில் அடியெடுத்து வைத்து இமாலய சாதனை - விராட்கோலியின் நெகிழ்ச்சி பதிவு.!
கடந்த 2017ல் விராட் கோலி இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வந்த அனுஸ்கா சர்மாவை திருமணம் செய்தார். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆகஸ்ட் 19, புதுடெல்லி (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் முக்கியமானவர் விராட் கோலி (Virat Kohli). வலதுகை மட்டைப்பந்து ஆட்டக்காரரரான இவர், இந்திய அணிக்காக தொடர்ந்து பல்வேறு சாதனைகளை தனிமனிதராகவும் படைத்தது இருக்கிறார்.
சச்சினுக்கு அடுத்தபடியாக ரன்கள் குவிப்பில் முக்கியமான வீரராக கருதப்படும் விராட், அடுத்தடுத்த உலகக்கோப்பை உட்பட பிற போட்டிகளுக்கு மும்மரமாக தயாராகி, தனது உடலையும் கட்டுக்கோப்புடன் வைக்க உடற்பயிற்சி செய்து வருகிறார்.
கடந்த 2017ல் விராட் கோலி இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வந்த அனுஸ்கா சர்மாவை திருமணம் செய்தார். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. Acid Attack to Dog: மரித்துப்போன மனிதம்; பூனைகளை தொந்தரவு செய்த நாய் மீது ஆசிட் வீசி தாக்குதல்; 35 வயது இளம்பெண் அதிர்ச்சி செயல்.!
சீக்கு (Cheeku) என்ற பட்டப்பெயரை கொண்ட விராட், பல இளைஞிகள் மனதை கவர்ந்த கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போதும் துறுதுறுப்புடன் இருக்கும் விராட் கோலி, பல சோதனைகளை கடந்து சாதனை படைத்து வருகிறார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை அவர் சிறப்பான தருணமாக உணருகிறார். அவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "என்றென்றும் நன்றியுள்ளவனாய்" என பதிவிட்டுள்ளார். இதற்கு அவரின் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து, தொடர்ந்து பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Forever grateful 🙏 pic.twitter.com/cpxoUNS0uG
— Virat Kohli (@imVkohli) August 18, 2023
(The above story first appeared on LatestLY on Aug 19, 2023 09:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

