Ronaldo Workout: தீவிர உடற்பயிற்சியில் மும்மரமாக ரொனால்டோ; லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.!
முயற்சி இருந்தால் வயது என்பது எண்ணிக்கை மட்டுமே என்பதை பலரும் தங்களின் செயல்பாடுகளால் உறுதி செய்கின்றனர். அதனை ரொனால்டோவும் உறுதி செய்துள்ளது.
டிசம்பர் 29, லிஸ்பான் (Sport News): போர்ச்சுகல் நாட்டைச் சார்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo). இவர் சர்வதேச அளவில் அறியப்படும் கால்பந்தாட்ட வீரர்களில் முதன்மையானவர் ஆவார். இவருக்கென உலகளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அதிரடியான விளையாட்டு: 38 வயதாகும் ரொனால்டோ கால்பந்தாட்டத்தில் செய்யாத சாதனைகளே கிடையாது என்று கூறலாம். சர்வதேச அளவிலான பல போட்டிகளில் தனது அதிரடியான விளையாட்டுத் திறமை காரணமாக போர்ச்சுகல் அணியை பலமுறை வெற்றி பெறச் செய்தார். வணிக ரீதியிலான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார். Painter Dies Heart Attack: மாரடைப்பால் மரணமடைந்த பெயிண்டர்; சிசிடிவியில் பதிவான மரணத்தின் இறுதி நொடிகள்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
2026 பீபா: தற்போது 2026 கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிக்காக ரொனால்டோ தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அது சார்ந்த தேர்வு போட்டிகளிலும் தொடர்ந்து தனது அணியுடன் விளையாடி வருகிறார்.
உடற்பயிற்சி: இந்நிலையில், எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் ரொனால்டோ, உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Dec 29, 2023 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

