டிசம்பர் 07, புதுடெல்லி (Sports News): பள்ளிப்பருவத்தில் நாம் படிக்கும்போதும் சரி, இன்றளவில் படிக்கும் மாணவர்களிடையே பேசும்போதும் சரி, ஒருசில மாணவர்கள் தேர்வுத்தாளில் பாடல்கள் எழுதுவது மற்றும் கதையடிப்பது போன்றவற்றை பெரிய பெருமையாக கூறுகின்றனர். அவ்வாறாக தனது உணர்வை வெளிப்படுத்திய மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு மாணவருக்கும் எச்சரிக்கை பாடமாக மைய வேண்டும்.
இறுதிவரை பரபரப்பும்-தோனியின் (Mahendra Singh Dhoni) வெற்றியும்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல் தொடரில், தனது தலைமையில் வழி நடத்திவருபவர் எம்.எஸ் தோனி @ மகேந்திர சிங் தோனி. விக்கெட் கீப்பிங், பேட்டிங், பெஸ்ட் பினிஷிங் என மைதானத்தில் இருப்போரை இறுதிவரை பரபரப்பாகி வெற்றிக்கனியை எந்தவைத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பதில் தோனியின் திறமை யாராலும் அடித்துக்கொள்ள இயலாதது.
மிஸ்டர் கூல்: இவர் தனது ரசிகர்களால் எம்.எஸ்.டி & தல தோனி, மிஸ்டர் கூல் உட்பட பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவருக்கு இந்தியாவை கடந்து சர்வதேச அளவிலும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவரது துடிப்பான செயல்பாடுகள் கிரிக்கெட்டை ரசிக்கும் பலருக்கும் அவரைப் போல நாம் செயல்படவாக முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்திருந்தது.
பள்ளி மாணவரின் செயல்: இந்நிலையில், டெல்லியில் பயின்று வரும் மாணவர் ஒருவர், தனது கணித தேர்வின் போது அனைத்து பதில்களுக்கு கீழேயும் தல., தல., தல (Thala) என்று குறிப்பிட்டதால் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். Women Against Crime in India 2022: மாவட்ட அளவில் 1,788 புகார்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தலைநகராக திகழும் மாவட்டம். அதிர்ச்சி ரிப்போர்ட்.!
தல., தல., தல..: தமிழில் தல என்றால் தலைவர் என்று பொருள்படும். தலைவர் என்ற வார்த்தையின் உணர்வு மிகுதியாக, தல என்ற வார்த்தையானது பிற்காலத்தில் பயன்படுத்த தொடங்கப்பட்டது. இந்நிலையில், கஜோதர் என்று அடையாளம் காணப்பட்ட மாணவர் செய்த விஷயம் தெரியவந்துள்ளது.
இடைநீக்கம்: டெல்லியில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாணவர், தனது கணித தேர்வில் ஒவ்வொரு பதிலுக்கும் "தல" என்ற வார்த்தையை குறிப்பிட்டதை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அவரை தற்போது இடைநீக்கமானது செய்துள்ளது.
ஐ.பி.எல் 2024: பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என பலரின் மனதில் இடம்பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் 2024 விளையாட்டில் களமிறங்கவுள்ளார். அவரது ரசிகர்கள் என்ற பெயரில் மாணவர் செய்த செயல், அவரை இடைநீக்கம் செய்யவைத்துள்ளது.
I don't think I can run You tube channel. I am kind of a person who can post 2-3 videos in a day and then disappear from Social Media for 1 year . ~ MS Dhoni pic.twitter.com/0cLaHOXTzU
— DIPTI MSDIAN (@Diptiranjan_7) December 2, 2023