ENG Vs IND 3rd Test, Day 2: இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆல் அவுட்.. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்..!

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ENG Vs IND 3rd Test, Day 2 ENG All Out (Photo Credit: @CricketNDTV X)

ஜூலை 11, லண்டன் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில், 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று  (ஜூலை 10) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND 3rd Test) மோதும் 3வது டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ENG Vs IND 3rd Test, Day 2: ஜேமி ஸ்மித் - பிரைடன் கார்ஸ் இணை அபாரம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலி 18, பென் டக்கெட் 23 ரன்னிலும் நிதிஷ் குமார் ரெட்டியின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து, ஓலி போப் - ஜோ ரூட் இணை நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அப்போது, ஓலி போப் 44 ரன்னில் ஜடேஜா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த ஹரி புரூக் 11 ரன்னில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 251 ரன்கள் அடித்தது. ஜோ ரூட் 99* ரன்கள், கேப்டன் ஸ்டோக்ஸ் 39* ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அபாரம்:

இதனையடுத்து, இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்னில் அவுட்டானார். அபாரமாக விளையாடி சதமடித்த ஜோ ரூட் 104 ரன்னில் பும்ரா பந்தில் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து, ஜேமி ஸ்மித் - பிரைடன் கார்ஸ் இணை அபாரமாக விளையாடியது. ஜேமி ஸ்மித் 51 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியில், பிரைடன் கார்ஸ் அதிரடியாக விளையாடி 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement