ENG Vs IND 3rd Test, Day 5: தனி ஆளாக போராடிய ஜடேஜா.. இங்கிலாந்து த்ரில் வெற்றி..!
இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஜூலை 14, லண்டன் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில், 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND 3rd Test) மோதும் 3வது டெஸ்ட் போட்டி, ஜூலை 10ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. ENG Vs IND 3rd Test, Day 5: இந்தியா 8 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.. ஜடேஜா போராட்டம்..!
இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):
இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104, பிரைடன் கார்ஸ் 56, ஜேமி ஸ்மித் 51 ரன்கள் அடித்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பந்த் 74, ஜடேஜா 72 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்தியா போராடி தோல்வி:
இதன்பின்னர், 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 44 ரன்கள் அடித்தார். இந்தியா சார்பில் வாசிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துரத்திய இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 39 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். அடுத்து வந்த வாசிங்டன் சுந்தர் டக் அவுட்டாகி வெளியேறினார். நிதிஷ் குமார் ரெட்டி 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தனி ஆளாக போராடிய ஜடேஜா 181 பந்துகளில் 61* ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
(The above story first appeared on LatestLY on Jul 14, 2025 09:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

