ENG Vs IND 4th Test, Day 1: ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அபாரம்.. காயத்தால் வெளியேறிய ரிஷப் பந்த்..!

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 4 விக்கெட்களை இழந்து 264 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 4th Test, Day 1 (Photo Credit: @sportstarweb X)

ஜூலை 23, மான்செஸ்டர் (Sports News): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஜியோ ஹாட்ஸ்டாரில் (Jio Hotstar) நேரலையில் பார்க்கலாம். அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில், 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ENG Vs IND 4th Test, Day 1: இந்தியா வலுவான தொடக்கம்.. கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இணை அபாரம்..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

இந்நிலையில், இன்று (ஜூலை 23) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND) மோதும் 4வது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டரில் தொடங்கியது. இப்போட்டியில், இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய ஷோயிப் பஷீருக்கு பதிலாக லியாம் டாசன் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியில் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அன்ஷுல் கம்போஜ் அணியில் இணைந்துள்ளார். மேலும், கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஆகாஷ் தீப் பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியா நிதான ஆட்டம்:

இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல். ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. கேஎல் ராகுல் 46 ரன்களில் அவுட்டாகினார். ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி அரைசதம் (58 ரன்கள்) கடந்து அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் கில் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 37 ரன்னில் காயம் காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். பொறுமையாக விளையாடி வந்த சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 264 அடித்துள்ளது. ஜடேஜா 19*, ஷர்துல் தாக்கூர் 19* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):

ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இந்தியா (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அன்ஷுல் கம்போஜ்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement