ENG Vs IND 5th Test, Day 1: 72 ரன்னுக்கு 2 விக்கெட் இழப்பு.. ஓவல் மைதானத்தில் மழை குறுக்கீடு..!
இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்களை இழந்து 72 ரன்கள் அடித்துள்ளது.
ஜூலை 31, ஓவல் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஜியோ ஹாட்ஸ்டாரில் (Jio Hotstar) நேரலையில் பார்க்கலாம். அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடந்து முடிந்த 4 போட்டிகள் முடிவில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ENG Vs IND 5th Test, Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. இரு அணியிலும் 4 மாற்றங்கள்..!
இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):
இந்நிலையில், இன்று (ஜூலை 31) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND) மோதும் 5வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஓல்லி போப் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. ஆரம்பத்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகினார். நிதானம் காட்டிய கேஎல் ராகுல் 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்களை இழந்து 72 ரன்கள் அடித்துள்ளது. சாய் சுதர்சன் 25* ரன்கள், சுப்மன் கில் 15* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்.
இந்தியா (பிளேயிங் லெவன்):
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
(The above story first appeared on LatestLY on Jul 31, 2025 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

