ENG Vs IND 5th Test, Day 2: இந்தியா 224 ரன்களுக்கு ஆல் அவுட்.. இங்கிலாந்து அதிரடி தொடக்கம்..!

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின், 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 1 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் அடித்துள்ளது.

ENG Vs IND 5th Test, Day 2: இந்தியா 224 ரன்களுக்கு ஆல் அவுட்.. இங்கிலாந்து அதிரடி தொடக்கம்..!
ENG Vs IND 5th Test, Day 2 Lunch Break (Photo Credit: @cricbuzz X)

ஆகஸ்ட் 01, ஓவல் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஜியோ ஹாட்ஸ்டாரில் (Jio Hotstar) நேரலையில் பார்க்கலாம். அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடந்து முடிந்த 4 போட்டிகள் முடிவில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ENG Vs IND 5th Test, Day 1: விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா.. இங்கிலாந்து அபார பந்துவீச்சு..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

இந்நிலையில், நேற்று (ஜூலை 31) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND) மோதும் 5வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஓல்லி போப் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 69.4 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57, சாய் சுதர்சன் 38 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அதிரடி தொடக்கம்:

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலி - பென் டக்கெட் இணை அதிரடியான தொடக்கம் கொடுத்தது. பென் டக்கெட் 43 ரன்கள் அடித்து அவுட்டானார். 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் அடித்தது. ஜாக் கிராலி 52* ரன்கள், கேப்டன் ஒல்லி போப் 12* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்.

இந்தியா (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

(The above story first appeared on LatestLY on Aug 01, 2025 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).