IND Vs ENG 3rd ODI: இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி: நேரலையில் பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மட்டும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் தொடர், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. கிரிக்கெட் மேட்ச்கள் (Next Cricket Match) தொடர்பான அப்டேட்களை (Cricket News Tamil) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.

IND Vs ENG 3rd ODI: இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி: நேரலையில் பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
IND Vs ENG ODI 2025 Team India (Photo Credit: @BCCI X)

பிப்ரவரி 10, அகமதாபாத் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய தேசிய கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 (IND Vs ENG T20i Series 2025) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (India Vs England ODI Series 2025) தொடரிலும் விளையாடுகிறது. இந்த போட்டிகளில் டி20 நிறைவுபெற்ற நிலையில், இந்தியா 4 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. முதல், இரண்டு (IND Vs ENG 1st ODI 2025 & 2nd ODI 2025) ஒருநாள் ஆட்டங்களில், இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. இதனால் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஒருநாள் தொடரையும் இந்திய அணி வென்று பெருமை சேர்த்தது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) ஓடிடியிலும் நேரலையிலும் பார்க்கலாம். Rohit Sharma: சதம் அடித்து விளாசிய ரோஹித் சர்மா.. அதிர்ந்த மைதானம்.. கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள்.! 

இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் (India Vs England 3rd ODI 2025):

மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் தொடர், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டம் 12 பிப்ரவரி 2025 அன்று, மதியம் 01:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. அன்றைய நாளின் பகல் நேர வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும், இரவு நேர வெப்பநிலை 18 டிகிரி செல்சியசும் என்ற நிலையில் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 10 கிமீ வேகம் என்ற நிலையில் இருக்கும். அன்றைய நாளில் வறண்ட வானிலையே நிலவும் என்பதால், மழைக்கான வாய்ப்புகள் இல்லை. நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் 132,000 பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை காணலாம்.

(The above story first appeared on LatestLY on Feb 10, 2025 09:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).