Varun, Axar, Yadav | ICC Champions Trophy Match 12 Clicks (Photo Credit: @BCCI X)

மார்ச் 02, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று இந்தியா - நியூசிலாந்து (India Vs New Zealand Cricket) அணிகள் மோதுகிறது. சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பெற இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 249 ரன்கள் எடுத்தது. இதனால் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி இருக்கிறது. Rachin Ravindra அப்படிப்போடு. முக்கிய விக்கெட்டை தட்டித்தூக்கிய இந்தியா.. ரச்சின் ரவிந்த்ரா விக்கெட் காலி.! 

அடுத்தடுத்து விக்கெட் எடுத்த வருண்:

இந்நிலையில், நியூசிலாந்து அணியின் சார்பில் களமிறங்கிய முக்கிய வீரரான கேன் வில்லியம்சன் அக்சர் படேலின் பந்தில், கேஎல் ராகுலிடம் விக்கெட் கொடுத்து வெளியேறினார். அவர் இறங்கி வந்து பந்தை எதிர்கொள்ள முயன்றபோது, பந்தை தவறவிட்டு கிரீஸ் லைனில் இருந்து வெளியேறி விக்கெட்டை பறிகொடுத்தார். வருண் இறுதியில் சான்டனர் விக்கெட்டை எடுத்தார். நேரடியாக போல்ட் அவுட் ஆகியது. 113 கிமீ வேகத்தில் வீசிய பந்தில் வருண் 4 வது விக்கெட்டை கைப்பற்றினர். அதேபோல, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். வருண் இன்றைய ஆட்டத்தில் மேத் ஹென்றி, சான்டனர், பிரேஸ்வெல், வில் யங் என 5 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

ஜடேஜா லேதம் விக்கெட் வீழ்த்திய காணொளி:

வருண் சக்கரவர்த்தி அசத்தல் பௌலிங்:

ரவீந்திர ஜடேஜா அசத்தல்: